பி.ஏ (கூட்டுறவு ), பி.காம் (கூட்டுறவு ) படித்து கூட்டுறவுப் பயிற்சியிலிருந்து விலக்குக் கோருபவர்கள், கணக்குப்பதிவியல் (Book Keeping) , வங்கியியல் (Banking) , கூட்டுறவு (Cooperation), தணிக்கை (Auditing) ஆகிய பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை (Consolidated Marklist) பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினை முடித்திருக்க வேண்டும் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் (9585887701), புதிய பேருந்து நிலையம் (9786511561) மற்றும் கோவில்வழி பேருந்து நிலையங்களில் (8220054498) தேர்வர்களுக்கு உதவிட உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் உதவிக்கு மேற்படி உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம். உதவி மையங்கள் 11.10.2025 காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை செயல்படும்..